பொட்டம்மான் விடயத்தை அறிவித்த கோட்டாபய! விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து நடந்த தீவிர விசாரணை (Video)
மே 18ஆம் திகதிக்கு பின்னர் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே என்ற விசாரணையை தன்னிடமும், பிரபாகரனின் தந்தையிடமும் நடத்தியதாக பிரபாகரனின் தாயார் என்னிடம் கூறினார் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டம்மானுடைய பூதவுடலும் கைப்பற்றப்படவில்லை, எதுவுமே கைப்பற்றப்படவில்லை.
ஆனால் அவருடைய இறப்பு பற்றி அல்லது அவர் இறந்ததாக சொல்லப்படுகின்ற விடயத்தை அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பத்திரிகைகளுக்கு, “அவருடைய உடல் கிடைக்கவில்லை. அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று நூறு வீதம் உறுதிப்படுத்தியிருக்கிறோம்” என தெரிவித்திருந்தார் என சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய விடயங்களை அலசி ஆராய்ந்து வருகிறது ஊடறுப்பு,