சுமந்திரன் - ரணில் சந்திப்பின் பின்னணி: புதிய ஜனாதிபதி யார்..!
சுமந்திரன் சட்ட நுணுக்கங்கள் ஊடாக செயற்படுவதாகவும் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ஜனாதிபதி எதிர்கட்சிகளுடன் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் சுமந்திரன் கலந்துகொண்டார்.
இதன்பின்னர் குறித்த கலந்துரையாடலில் தனது பங்குபற்றல் குறித்து அவர் ஒரு வியாக்கியானம் கொடுத்திருந்தார்.
இதற்கமைய சுமந்திரன் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார்.
அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தமிழ் மக்கள், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து வேறுபடுத்தி பார்க்கவில்லை என்ற வகையில் வியாக்கியானம் கொடுக்க கூடும். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் பேரினவாத பொருளாதாரம் பற்றியதாகவே அமையும் அங்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படாது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய செயற்பட்டு அரசாங்கம் மக்கள் மீது வரி சுமையை அதிகரித்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி எதிர் கட்சிகளை கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைத்திருந்தார். ஆனால் எதிர் கட்சிகள் அதனை மறுத்து அரசாங்கத்தின் பொறியிலிருந்து தப்பிவிட்டனர்.
காரணம் சர்வதேச நாணய நிதியத்தால் கிடைக்கப்பெற்ற நன்மைகள் அனைத்தையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பழிகளையும் மக்களின் கோபத்தையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும் அடுத்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வெற்றி பெறுவார் என்று நிச்சயமாக கூற முடியாது.''என தெரிவித்துள்ளார்.