கண்டியில் அதிரடியாக களமிறங்கியுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் K9 பாதுகாப்பு குழு
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் பங்களிப்பு முக்கிய பங்காற்றுகின்றது.
அந்தவகையில், சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக, கண்டி மாவட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழுவின் தேடல் மற்றும் மீட்புக் குழு இப்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தீவிர நடவடிக்கைகள்
மேலும், Trained K9 teams அதாவது, மிக தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அணியினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
UAE Search & Rescue on the ground in Sri Lanka 🇱🇰 🇦🇪
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) December 5, 2025
The UAE Search and Rescue Team is now actively operating in the Kandy district, their designated zone for Cyclone Ditwah relief efforts.pic.twitter.com/dzNIedf783
Equipped with advanced gear, water-rescue units, boats, trained…
இந்த குழுவினர், மிக திறன் வாய்ந்த உபகரணங்கள், நீர் மீட்புப் பிரிவுகள், படகுகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு, அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் விரைவான மீட்பு மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றனர்.
இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை மீட்கும் பணிகள் மற்றும், அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்வதில் மிக தீவிர பங்களிப்பை ஆற்றுவதாக கூறப்படுகின்றது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam