வெளிநாடொன்றில் போராட்டம் நடத்திய பங்களாதேஷ் பிரஜைகள் மூவருக்கு ஆயுள்தண்டனை
ஐக்கிய அரபு ராஜ்யத்தில் போராட்டம் நடத்திய பங்களாதேஷ்(Bangladesh) பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை காலம் பூர்த்தியானதும் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு சேதம்
பங்களாதேஷில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக சில நாடுகளில் பங்களாதேஷ் பிரஜைகள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற பங்களாதேஷ் நாட்டவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு ராஜ்யத்தின் சில வீதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அபுதாபி மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த தண்டனையை விதித்துள்ளது.
பொது மக்களை ஒன்று திரட்டி குழப்பம் விளைவித்ததாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் குறித்த பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பணியாற்றி வரும் வெளிநாட்டு பிரஜைகளில் மூன்றாவது பெரிய சனத்தொகையைக் கொண்டவர்கள் பங்களாதேஷ் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |