இலங்கையிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை நீடிப்பு! - ஐக்கிய அரபு இராச்சியம்
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானங்கள் தமது நாட்டுக்குள் வருவதை தடை செய்யும் காலத்தை, ஐக்கிய அரபு இராச்சியம் ஜூலை 21 வரை நீடித்துள்ளது.
ஏ.ஆர்.என் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது இந்த முடிவு ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்க கட்டளைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களில் இந்த நான்கு நாடுகளின் வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணிக்க முடியாது என்று அது மேலும் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணிகள் சேவைகளை நிறுத்தி வைப்பது ஏப்ரல் 24 (இரவு 11:59) முதல் நடைமுறைக்கு வந்தது.
அதே நேரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் விமானங்கள் மே 13 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.