அமெரிக்க ஒப்பந்த விவகாரம் - மகிந்த உட்பட 54 பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு!
பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்கள், அமெரிக்க நிறுவனத்தினர் என 54 பேரின் பெயர் குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கெரவலப்பிட்டிய யுளுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் அரசுக்கு இருந்த பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்தமை மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் முடிவை செல்லுப்படியற்றதாக்கி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவையின் உறுப்பினர்கள், அமெரிக்க நிறுவனத்தினர் என 54 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து வழக்கு முடியும் வரை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் இலங்கை அரசுக்குரிய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதார், உயர் நீதிமன்றத்தை கேட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
