மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி : ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு (Mullaitivu) மாங்குளம் வெள்ளாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
குறித்த சம்பவம் நேற்று (20.11.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாங்குளம் வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தில் மாங்குள பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் (20 வயது), ஜெயகுமார் விதுசன் ( 23வயது ) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மரியதாஸ் சுவாமிகீர்த்தி (31 வயது) எனும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
