ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ வீதியில் விபத்து -இரு இளைஞர்கள் மரணம்
ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
விசாரணை
இதன்போது, ஹொரவ்பொத்தானை- நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாத்ல சிஹான் (21வயது) மற்றும் பிரவீன் காவிந்த இலங்க சிங்ஹ (20வயது) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பேருந்தின் சாரதி கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளில் மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
