போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் விடுதலை
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் வைத்து நேற்றைய தினம் வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றம் ஊடாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞர்களை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் நிறுத்தல் சமிஞ்ஞையை மீறிச்சென்றமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரனை அடுத்த மாதம் 10ம் திகதி அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம் தாக்குதலை மேற்கொண்ட அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..........
தமிழர் பகுதியில் இளைஞர் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
தமிழர் பகுதியில் பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
