வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
வவுனியாவில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது வவுனியா பொலிஸாரால் இன்று (18.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கைகளின் போது, கூமாங்குளம் பகுதியில் 5கிராம் 140மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அத்துடன், வேப்பங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 5கிராம் 100மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
