மண்சரிவில் அகப்பட்டு இரண்டு யுவதிகள் பரிதாப மரணம்
பதுளையில் மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
உடுவர, ஹாலிஎல வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றது. .
பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வீட்டின் மீது பின்புறமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
யுவதிகள் உயிரிழப்பு
ஒருவர் கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண், மற்றவர் நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மண் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் கடையிலிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.









அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
