கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார்சைக்கிள்! இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலி
பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இராவணாகொடை, கலப்பிட்டியவில் வசிக்கும் சந்தருவன் ரணசிங்க (வயது 19) மற்றும் என்.ஜீ.தினேஷ் (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது, ஐந்து மோட்டார்சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த குழுவில் ஒரு மோட்டார்சைக்கிளே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் மோட்டார்சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?... போட்டோவுடன் இதோ Cineulagam
