இருவேறு வீதி விபத்துக்களில் இரு பெண்கள் பரிதாப மரணம்
இரு வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற இரு விபத்துக்களில் பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, நிக்கலஸ் மாகஸ் மாவத்தை, தலாதுவ சந்திக்கு அருகில் வானொன்று பாதசாரி பெண்ணொருவரை மோதியதில் குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குருநாகல் - கொழும்பு வீதி, கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியதில் அப் பெண் மரணமடைந்துள்ளார்.
கடதுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
