மோசமான செயலில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பானது அந்தப் பிரதேச மக்களால் நேற்று (31.07.2023) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்தாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிவான் நீதிமன்றில் முன்னிலை
ஒப்படைக்கப்பட்ட இரு பெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் கூறியுள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட பெண்களை தாம் கைது செய்துள்ளதாகவும் இரு பெண்களையும் திருகோணமலை மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
