முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் துவிச்சக்கர வண்டி திருட்டு
முள்ளியவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(21.2.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த துவிச்சக்கர வண்டி தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி பயில வந்த மாணவர்களால் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞன் ஒருவர் துணிச்சலுடன் அதனை திருடி செல்லும் காணொளி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணை
திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞனின் உருவம் காணொளியில் பதிவாகியுள்ள நிலையில், அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த இளைஞனை அடையாளம் காணக் கூடிய தகவல்கள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam