இலங்கையில் நாளுக்கு நாள் உச்சம் தொடும் துவிச்சக்கர வண்டி விலை
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகளை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சாதாரண துவிச்சக்கர வண்டியின் விலையை 60,000 ஆகவும், கியர் துவிச்சக்கர வண்டியின் விலையை 77,000 ஆகவும் உயர்த்தியுள்ளனர்.
துவிச்சக்கர வண்டிகளில் கையிருப்பு குறைவு
சந்தைகளில் துவிச்சக்கர வண்டிகளில் கையிருப்பு தீர்ந்துள்ளமையினால் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் ஆடம்பரப் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றமையும் அவற்றிற்கு 55% வரி விதிக்கப்பட்டமையும் துவிச்சக்கர வண்டிகளின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
