வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இரண்டு கணக்குகள்
இது தொடர்பில் அவர் தனது Facebook பதிவில் குறிப்பிடுகையில், இப் புதிய update மூலம் பயனர்கள் ஒரே செயலியில் (App) இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்த முடியும்.
அத்துடன், ஒரு தொலைபேசியில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு (Android) பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
