யாழில் இரண்டு கிராமங்கள் முடக்கம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 721 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ். மாவட்டத்தில் இதுவரை 73 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 919 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். அதில் 3 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று நலமாகி வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.
நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்குத் தற்போது வழங்கட்டு வரும் 5
ஆயிரம் ரூபா கொடுப்பனவு யாழ். மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721
குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan