இரண்டு டிரில்லியனுக்கும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ள நாணயத்தாள்கள்! வெளியாகும் அதிர்ச்சித் தகவல்
இலங்கை மத்திய வங்கியின் பரந்த மொத்த பண விநியோகம் (நாணய அச்சிடுதல்) 2.1 டிரில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, கடந்த 17 மாதங்களில் மட்டும் புழக்கத்தில் உள்ள நாணயத்தின் அளவு 303,956 மில்லியன் ரூபா அதிகரித்துள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
பண விநியோகம்
'இலங்கை மனித உரிமைகள் மையம்' இன் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் ஒரு அறிக்கையை வெளியிட்டு, மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த அறிக்கையில தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பண விநியோகம் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகளின் (மார்ச் 28, 2025 மற்றும் மே 22, 2026) தரவுகளை ஆய்வு செய்தபோது கீழ்வரும் விடயங்கள் தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2025ம் ஆண்டின் ஜனவரி நிலவரப்படி பரந்த மொத்த பண விநியோகம் 14439.1 பில்லியன் ரூபாவாக உள்ளது.
இது நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் 14,439.1 பில்லியனிலிருந்து 16,585.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன்படி, கடந்த 15 மாதங்களில் மட்டும் பண விநியோகம் 2,146.1 பில்லியன் ரூபாய் (2.1 டிரில்லியன்) அளவுக்கு விரிவடைந்துள்ளது என்றும் குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
10-வது சர்வதேச அனிமே விருது விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவிற்கு கிடைத்த கௌரவம் Cineulagam