இந்தியாவில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து
சென்னை (Chennai) - திருவள்ளூர் மாவட்டத்தில் சரக்கு தொடருந்து ஒன்றும் எக்ஸ்ப்ரஸ் தொடருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது தொடருந்தின் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன் இரு பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு தொடருந்துகளிலும் பயணித்த 1400இற்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பங்கருக்குள்ளேயே வெடிக்கப்போகும் ஈரானின் அணுகுண்டுகள்!! ஈரான் ஊடகவியலாளர் கூறுகின்ற அச்சம்தரும் தகவல்கள்
பயணிகள் மீட்பு
விபத்தின் போது காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, ஏனைய பயணிகள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான பௌதீக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமிக்ஞை கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri