“இலங்கையில் தொடரும் வீண் சாவுகள்”- சாவை தழுவிய இரண்டு சிறுமிகள்!
குருநாகல் வில்பேவ வாவியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 மற்றும் 14 வயதுகளை கொண்டவர்களே நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 சிறுமிகள் நீராடச் சென்ற நிலையில் அதில் இருவரே நீரில் மூழ்கியுள்ளனர்.
ஏனைய இரண்டு சிறுமிகளும் காப்பாற்றப்பட்டனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் அடிக்கடி நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
பாதுகாப்பு முறைகளை கையாளாமல் செயற்படுவதே உயிரிழப்புக்களுக்கான காரணங்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



