சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது!
சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாகசிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ .டபிள்யூ. எஸ். நிசாந்த வெதகேக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவல்
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 07 லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4601 சட்டவிரோதமாக சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகினர்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் சாஜன் 36937 பண்டார,பொலிஸ் கொஸ்தாபல் 29752 இஸுறு பொலிஸ் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு சந்தேக நபர்களுடன் பெருந்தொகையான இந்த சட்ட விரோத சிகரெட்டுக்களும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 40 நிமிடங்கள் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
