பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய மூவர்!
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலுபோமுல்ல பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் 25 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு சந்தேகநபரும், 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோனதுவ மற்றும் வஸ்கடுவ பகுதிகளைச் சேர்ந்த 39 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்தோடு, கல்கிஸை பொலிஸ் பிரிவின் இரத்மலானை பகுதியில் 11 கிராம் 790 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 53 ஆயிரத்து 100 ரூபா பணத்தொகை என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 21 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
