யாழில் மானிப்பாய் விபத்தில் உயிரிழந்த குடும்பப்பெண்: இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பப்பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம்
அத்துடன், இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது
செய்துள்ளதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam