மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஆதரவான வர்த்தகர் உட்பட இரு சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொட பொருளாதார நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பூகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து சில தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் கைதான வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்ளிட்ட இருவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான 39 வயதுடைய நபரும் 44 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
