முச்சக்கரவண்டியொன்றில் எரிபொருள் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இருவர் கைது
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியொன்றில் எரிபொருள் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 200 லீட்டர் டீசல் மற்றும் 100 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா - முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து முச்சக்கரவண்டியில் எரிபொருளை எடுத்து செல்லும் வழியில் குறித்த முச்சக்கரவண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
8 கொள்கலன்கள் மீட்பு
இதன்போது 4 கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களது வீட்டிலிருந்து 4 கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் எரிபொருளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா - சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிய வருகிறது.
சந்தேகநபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், திங்களன்று
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
சமிந்த பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.








அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
