கட்டானையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவரும், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றொருவரும் என இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கட்டானையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 51 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டா கம்முல்ல, தேமன் சந்தி மற்றும் கணேபொல, கொட்டுகொட பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் கட்டான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



