கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள்
அவுஸ்திரேலிய கடற்படையின் HMAS Adelaide மற்றும் HMAS Anzac ஆகிய இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
வருகை தந்த இரண்டு கப்பல்களையும் நேற்று (25.10.2022) இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றுள்ளனர்.
2017ஆம் ஆண்டில் பிராந்திய பாதுகாப்புப் படைகளுடனான கூட்டுறவை வலுப்படுத்த அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இந்தோ-பசிபிக் முயற்சி (IPE) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
14 நாடுகளுடன் கூட்டாண்மை
திமோர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் இந்தியா போன்ற 14 நாடுகளுடன் இந்த கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு வந்துள்ள 230 மீட்டர் நீளமுள்ள HMAS Adelaide, கப்பலில் 18 உலங்குவானூர்திகளும் 543 பணியாளர்களும் உள்ளனர்.
118 மீட்டர் நீளமுள்ள HMAS Anzac போர்க்கப்பலில் 119 பேர் உள்ளதுடன் தாக்கும் உலங்குவானூர்தியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
