2 பாடசாலை மாணவர்களை காணவில்லை: தீவிரமாக தேடும் பொலிஸார்
மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரண்டு மாணவர்களும் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் மாயம்
நாத்தாண்டிய, முட்டிபடிவெல பகுதியைச் சேர்ந்த கவீச மதுசங்க என்ற 15 வயது சிறுவனும், நாத்தாண்டிய, சாகரகம பகுதியை சேர்ந்த லக்ஷான் நிமந்த என்ற 15 வயதுடைய சிறுவனும் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் நாத்தாண்டி பிலாகட்டுமுல்ல நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு மாணவர்களிடமிருந்தும் புகையிலை உள்ளிட்ட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து பாடசாலை அதிபர் அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாரிடம் முறைப்பாடு
இதனால் மாணவன் மனமுடைந்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மாரவில பொலிஸார் காணாமல் போன சிறுவர்களை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
