29 ஆண்டுகளாக நிகழாத ஒரு விடயம்! இலங்கை டெஸ்ட் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்
29 ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு வலது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை சார்பில் களமிறங்கியுள்ளனர்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளான இன்று(19.06.2025) இலங்கை சார்பில் பதும் நிஸ்ஸங்க மற்றும் அறிமுக வீரர் லஹிரு உதார ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
குறித்த இருவரும் வலது கை துடுப்பாட்ட வீரர்கள் என்ற அடிப்படியில், 29 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சார்பில் இரண்டு வலது கை துடுப்பாட்ட வீரர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸைத் தொடங்கினர்.
1995 - Boxing Day
இது போன்ற ஒரு நிகழ்வு, இறுதியாக மெல்போர்னில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலேயே நடந்தது.
1995ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நடந்த இந்த 'Boxing Day' போட்டியில் இலங்கையின் இன்னிங்ஸை ரொஷான் மஹநாம மற்றும் சண்டிகா ஹதுருசிங்க ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போதிருந்து இன்றுவரை, 260 போட்டிகளில் வலது கை மற்றும் இடது கை துடுப்பாட்ட வீரர்களே இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
