காரைநகர் கடலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காப்பாற்றப்பட்டனர்!
யாழ்ப்பாணம்(Jaffna), காரைநகர் கடலில் நேற்று(14) மாலை நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளதுடன், மற்றைய இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு இரண்டு உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |