இரு அரச அதிகாரிகளுக்கு நேர்ந்த விபரீதம்: பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்
களுத்துறை, அவித்தாவ ஒலகந்த எத்தாவெட்டுனுவல பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தேபான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று (25) காலை நீராடச்சென்றுள்ளனர்.
இதன்போது சுகாதார பரிசோதகர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் மற்றும்எஸ். ஹர்ஷநாத் ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை நாளை (26) நடைபெறவுள்ளதுடன், இத்தேபனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.