ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமாயின் நாடு மீண்டும் பாரியதொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி..
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு எந்தவொரு கட்சிக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகள் இரத்து செய்யப்படுமாயின் நாடு கடந்த கால பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |