அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாமல் போகும் : அமைச்சர் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் நிபந்தனைகளை ஏற்றிருக்காவிட்டால், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க முடியாமல் போயிருக்கும். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தையும் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவாக மட்டக்களப்பில்(Batticaloa) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு வாக்களிக்கும் மக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரதேசத்தில் 75 வீத மேலதிக வாக்குகளினால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். ஐ.தே.க, மக்கள் ஐக்கிய முன்னணி, பொதுஜன பெரமுன உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்த பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் போட்டியிடுகிறார்.
ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்பதற்காக அன்றி, தாய் நாட்டை மீள கட்டியெழுப்பும் திட்டத்தை வெல்ல வைப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. நாட்டை பங்களாதேஷமாக மாற்ற முயன்றார்கள்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மனித உயிர்களைக் காக்கவும் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். ஜனாநாயகத்தை பாதுகாக்கத் தவறிய சஜித்திற்கோ அநுரவுக்கோ தேர்தலில் போட்டியிட எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
நாட்டையும் ஜனநாயக்தையும் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்க 70 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். நாடு பின்னடைந்து சுற்றுலா பயணிகள் வருகை தராத நிலை காணப்பட்டது.
நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்
வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 420 ரூபாவுக்கு டொலரை பெற்று அனுப்பும் நிலை காணப்பட்டது. கடனை மீளச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நாடாக வெளிநாடுகள் அறிவித்தன. வங்குரோத்து நாடுகளின் கடன் பத்திரங்களை வெளிநாடுகள் ஏற்கவில்லை.
அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் நிபந்தனைகளை ஏற்றிருக்காவிட்டால் ஆப்கானிஸ்தான், சிம்பாம்வே போன்ற நிலைக்கு நாடு சென்றிருக்கும்.
2027 வரை அதே போன்றே ஒப்பந்தத்தை பாதுகாக்காவிட்டால் 2025 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும். அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும். ஓய்வூதியம் வழங்க முடியாது போகும்.
ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை விடுத்து செயற்பட்டால், எந்த வேட்பாளராலும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது போகும். 2025 வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என சஜித்தினால் கூற முடியுமா என சவால் விடுகிறேன்.
ஜனாதிபதி செய்து கொண்ட உடன்படிக்கையை மீறினால் ஒரு மாதத்திலே நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். அரச ஊழியர்களுக்கு 3 வருட காலத்திற்கு தொடர்ச்சியாக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
