ரணில் - மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்
2022இல் மின்சார நெருக்கடிக்கு 2015 சிறிசேன - ரணில் அரசாங்கமே காரணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa ) குற்றம் சுமத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு உமா ஓயா திட்டத்தையும், சம்பூர் மின்சார திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால், 2022ஆம் ஆண்டு இலங்கையில் மின்சார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று தேர்தல் பேரணியில் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
மின்சார நெருக்கடி
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கமே, உமா ஓயா மற்றும் சம்பூர் மின்சாரத் திட்டங்களை இடைநிறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே 2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கையில் மின்சார நெருக்கடி நிலை ஏற்பட்டதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




