யாழில் மதுபோதையில் பொதுமகனை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரி
யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியால் சென்ற நபரை இடைமறித்து அவருடன் முரண்பட்டு, தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
முறைப்பாடு பதிவு
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan