பிரபல பாடசாலை மாணவர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தில் கொழும்பை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவரும், யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 17 வயது மாணவன் ஒருவரும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், யாழ்ப்பாணம் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுது்தப்பட்டனர்.
அவர்களை அச்சுவேலியில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் 14 நாட்கள் தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரால் விசாரணை
கொழும்பைச் சேர்ந்த 17 வயது மாணவனிடம் ஆயிரத்து 500 போதை மாத்திரைகளும், யாழ்ப்பாணம் - ஊரெழுவைச் சேர்ந்த மாணவனிடம் 200 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ். பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.