மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த இரண்டு அரசியல் கட்சிகள்
மட்டக்களப்பில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
குறித்த வேட்பு மனுக்கள் நேற்றையதினம் (09.10.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் போராட்ட முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கட்சியின் தலைமை வேட்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தலைமையில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல்
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் சங்கு சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.
மாவட்டத்தில் மூன்று சுயேட்சை குழுக்களும் 4 அரசியல் கட்சிகளும் இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த தமிழரசுக் கட்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
