தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு - இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
சூரியவெவ - வெவேகம பிரதேசத்தில் பொலிஸாரால் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட எதிர் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சென்ற போது, அவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன் போது பொலிஸாருக்கும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri