சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று காலை (17) மாலபே, தலாஹேன, பராக்கிரம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
35வது பொலிஸ் மா அதிபர்
தற்போதைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சி.டி. விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் நேற்று காலை தனது 63 வயது வயதில் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தார்.
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை.. ஜனாதிபதி மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan