ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமனம்!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு குழு குருநாகலில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிற்கும் மற்றைய குழு கொழும்பில் உள்ள வீட்டிற்கும் அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய ஆலோசனை
கடந்த 9ம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களம், குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
10 பேர் மரணம்
கடந்த மே மாதம் 9ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தின் பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதன்போது 10 பேர் கொல்லப்பட்டதுடன், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமமைந்தனர். ஏராளமான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam

ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
