கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இருவர் கைது
யாழ்ப்பாணத்தில்(Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
மேலும் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்பதும் , கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
