மட்டக்களப்பில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரு வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது(Photos)
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று (11.02.2023) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அதிரடிப்படை கட்டளைத்தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருணஜெய சுந்தரவின் ஆலோசனைக்கமைய, விசேட அதிரடிப்படை குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கை
இதன்போது இருவர் வியாபாரத்துக்காக சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரி சங்குகளை எடுத்துக்கொண்டு வந்தபோதே அவர்களை விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் வலம்புரிசங்குகளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் மீட்கப்பட்ட வலம்புரி சங்குகளையும் விசேட
அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam