இலங்கையர் உட்பட இரண்டு இளைஞர்கள் விமான நிலையத்தில் கைது
இலங்கையர் உட்பட இரு இளைஞர்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2.5 கோடி ரூபாய் பெறுமதியான 4 கிலோ தங்கத் தூளை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கச் சட்டத்தின் கீழ், இலங்கையைச் சேர்ந்த முகமது ஜலீல் என்ற 35 வயதுடையவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 வயதான முகமது உசேன் ஆகிய இருவரை வருவாய் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
தங்க கடத்தல்
கொழும்பில் இருந்து சென்ற இந்த இரண்டு பயணிகள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததால், சந்தேகத்தின் பேரில் இருவரையும் சோதனையிட்டதில், மெழுகு வடிவில் இருந்த 4 கிலோ தங்கத் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணையின் போது ஹுசைன் என்ற நபரே தங்கத்தை தனக்கு வழங்கியதாக இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள்
சந்தேகத்தின் பேரில் மட்டும் உறுதியான ஆதாரங்கள் ஏதுமின்றி வருவாய் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இதேவேளை, இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட எட்டு கிலோ கிராம் தங்கம் பாம்பன் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You May like this





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
