நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி- பொலிஸார் தீவிர விசாரணை
காலி - பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(26.02.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam