வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி (Photos)
வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (18.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டர் சைக்கிளில் பயணித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த மோட்டர் சைக்கிள் வவுனியா, ஏ9 வீதி சாந்தசோலை சந்திப் பகுதியில் பயணித்த போது, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று சாந்தசோலை சந்தியில் திரும்ப முற்பட்டுள்ளது. இதன்போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் படு காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தரான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மரணமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
மற்றைய மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த முதியவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த திசாநாயக்கா (வயது 27), சாந்தசோலையைச் சேர்ந்த சண்முகம்நாதன் (வயது 63) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த பதவி ஏற்ற நாளில் இருந்து ஆரம்பித்த அட்டூழியங்கள்! பறிக்கப்படுமா ராஜபக்சர்களின் குடியுரிமை(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
