குடும்பத்துடன் கொழும்பு சென்ற தமிழ் குடும்பம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
ரயிலில் மோதுண்டு மற்றும் ரயிலில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, பட்டிபொல பொலிஸ் பிரிவில் உள்ள பரகும்புர மற்றும் அம்பேவெல ரயில் பாதையை ஆய்வு செய்யச் சென்ற ரயில்வே உதவியாளர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்தார்.
நேற்று அதிகாலை ரயில் பாதையை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் ரயிலில் மோதி அவர் உயிரிழந்தார்.
ரயில் விபத்து
உயிரிழந்தவர் தியத்தலாவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞன் பலி
உயிரிழந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் பயணித்த நிலையில் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.

இதன் போது ரயிலில் இருந்து விழுந்த நபர் பலத்த காயமடைந்து மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri