திருகோணமலையில் கத்தி குத்துக்கு இலக்கான இருவர் படுகாயம்
திருகோணமலை - கிண்ணியா, சின்னமகாமாறு பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்கான இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26.01.2023) பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான காஞ்சா உம்மா (வயது 38) மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபூர் பவுசூர் (வயது 28) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
காயமடைந்த இருவரையும் கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அயல் வீட்டிலிருந்தவர் குடும்ப தகராறு காரணமாக தன்னை தானே கத்தியால் குத்தி கொள்ள முயற்சித்த போது காப்பாற்ற சென்ற பெண்ணையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்நிலையில் கத்தியால் வெட்டிய நபர் ஒரு மன நோயாளி என்றும் அவர் சில நேரங்களில் கத்தியை கையில் வைத்துக்கொண்டு தன்னைத் தானே வெட்டுவதற்கு பல தடவைகள் முயற்சித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
