தமிழர் பகுதி தவிசாளருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(17.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உப தவிசாளருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கொக்குளாய் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும் சான்றுப் பொருட்களுடன் கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், கைதான தவிசாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்ததரவிட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.