கோர விபத்தில் சிக்கி இருவர் மரணம்! இருவர் படுகாயம்
குருநாகல் - தம்புள்ளை ஏ - 6 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த கப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஓட்டோவின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துநரும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஓட்டோவின் சாரதியும், ஓட்டோவில் பயணித்த நபர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் கப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
